இத்தரணியிலே பிறந்தோம் ஒரு பரணி நாளிலே
(பரணியிலே பிறந்தால் தரணி ஆள்வர் என்பார்கள்) பின்
தவழ்ந்து மகிழ்ந்தோம் தாயின் மடிதனிலே, மண்ணின் மைந்தர்களாக
தந்தையிடம் நல்லறிவு தகவல்களை கேட்டறிந்தோம் பலவற்றை
தங்கையிடம் கேட்டறிந்தோம் சகிப்பதன் மதிப்பதனை
ஆசானிடம் கற்றறிந்தோம் அமுதமொழி தமிழதனை – ஆயினும்
அனைவரிடத்தும் எங்கள்பால் அரவணைப்பில்லை..
எப்படி அறிவீர்கள் எங்களது திறன்பற்றி, இருப்பினும் கேட்டுப்பாருங்கள்
அதோ அந்த பறக்கும் பறவையிடம் கேட்டுப்பாருங்கள் எங்களைப்பற்றி – அது
பாரெங்கும் பறந்து சென்று மலரும் மன்னர்கள் என்று கூறிடும் எங்களைப் பற்றி
காகத்திடம் கேட்டுப்பாருங்கள் எங்களைப்பற்றி – அது
கா-காவென கரைந்து, இவர்கள் ஒற்றுமையில் எங்களை மிஞ்சிடும் மிதவாதிகள்
என்று கூறிவிடும் எங்களைப்பற்றி,
பாடிச்செல்லும் குயிலிடம் கேட்டுப்பாருங்கள் எங்களைப்பற்றி – அது
இனிமையாகப் பாடிச்சொல்லும் இவர்கள் எதிர்கால மருத்துவர்கள் என்று.
மழலை மொழி பெசும் கிளியிடம் கேட்டுப்பாருங்கள் எங்களைப்பற்றி – அது
குழந்தை மொழியிலே பேசி இவர்கள் வருங்கால ‘கலாம்’ என்று கூறிவிடும் – எங்களைப்பற்றி
நீரிலிருந்து பாலை பிரித்துண்டு தூதுபோன அந்த அன்னப்பறவையிடம் கேட்டுப்பாருங்கள் எங்களைப்பற்றி – அது
அழகு நடைபுரிந்து, அவர்கள் எதிர்கால ‘ஆசிய ஜோதி’ என்று கூறிவிடும் – எங்களைப்பற்றி
நமது தேசியப்பறவையிடம் கேட்டுப்பாருங்கள் எங்களைப்பற்றி – அது
தோகை விரித்தாடி இவர்கள் “பேக” வள்ளலென்று புகழ்ந்துவிடும் – எங்களைப்பற்றி
கோவர்த்தன கூட்டத்திடம் கேட்டிடுங்கள் எங்களைப்பற்றி – அவை
எங்களைப்போல் பாலீந்து தாயாக பயன்புரிவர் என்று கூறிவிடும் – எங்களைப்பற்றி
தமிழ் கடவுளுக்கு கொடியான சேவலிடம் கேட்டிடுங்கள் எங்களைப்பற்றி – அது
கூரை ஏறிக்கூவிச் சொல்லும், எங்களது விடிகாலை விழிப்புப்பற்றி – நம்
தலைநகர் சென்று மெரினாவில் கேட்டிடுங்கள் எங்களது சாதனை பற்றி – அது
கத்தியின்றி, ரத்தமின்றி, போர்புரிந்து மீட்டுத்தந்த ஜல்லிக்கட்டின் வெற்றிபற்றி புகழ்ந்து சீரிடும் – எங்களைப்பற்றி
வீரத்துறவி விவேகியிடம் கேட்காமலே கூறிவிட்டார் – எங்களைப்பற்றி
அவர்கள் எதையும், எப்போதும் சாதிப்பார்கள் என்று சூளுரைத்து
All the Powers with in you, you can do anythink and everything என்று
எப்போதோ புகழ்ந்து கூறிவிட்டு – மேலும்
என்னிடம் நூறு மாணவ மணிகளை ஒப்படையுங்கள் – இந்நாட்டை
செப்பனிட்டு, சீர்தூக்கிடுவேன் என்று புகழாரம் சூட்டியுள்ளார் – எங்களைப்பற்றி
இதுதான் மாணவ சமுதாயமாகிய நாங்கள்
இப்போதாவது எங்களைத் திரும்பிப் பாருங்கள், அரவணையுங்கள்,
எங்களைப்பற்றி கூறி முடிக்க இத்தகவல்கள் போதுமென கருதி
மீண்டும் சந்திப்போம்.