தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒட்டங்காடு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணி தள பொறுப்பாளர்கள் 100 நாள் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்று விதி உள்ளது. 100 நாள் முடிந்த பிறகு வேறு ஒருவரை நியமிக்க வேண்டும். அவர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர் அந்த வார்டில் 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்து தொடர்ந்து வேலை செய்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவு உள்ளது. ஆனால் ஒட்டங்காடு ஊராட்சியில் மூன்று கிளசர் உள்ளது. மூன்று கிளஸருக்கும் மூன்று பணிதள பொறுப்பாளர்கள் உள்ளனர்.
2011ஆம் ஆண்டு முதல் பணி தள பொறுப்பாளர் நல்லமான் புஞ்சை என்ற கிராமத்தை சேர்ந்த கலைவாணி என்பவர். ஒட்டங்காடு உராட்சியில் உள்ள 12 வார்டுக்கு கலைவாணியே பணிதள பொறுப்பாளர். ஒரு வருடத்திற்கு பிறகு ஊராட்சியில் கிராமங்களை மூன்றாக பிரித்து ஒரு பகுதிக்கு நவக்கொல்லைக்காட்டை சேர்ந்த ஐயப்பன் என்பவரும், இன்னொரு பகுதிக்கு பெரிய தெற்குக்காட்டை சேர்ந்த சரண்யா என்பவரும் பணிதள பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு மூன்று கிளசர்கள் உருவாக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் 2011 முதல் வேலை செய்து வந்த நிலையில், நவக்கொல்லைக்காட்டை சேர்ந்த ஐயப்பன் என்ற பணிதள பொறுப்பாளருக்கும் அப்போது ஊராட்சி செயலாளராக இருந்த சண்முகத்துக்கும் நிர்வாக ரீதியாக சம்பளம் போடும் விஷயத்தில் தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்து அவரை பணிக்கு வர அனுமதிக்கவில்லை. ஐயப்பனும் வர விரும்பவில்லை. அதன்பிறகு அந்த கிளசருக்கு பரமசிவம் என்பவரை தற்காலிகமாக நியமிக்கப்பட்டு பரமசிவம் அந்த கிளசரை கவனித்து வேலை செய்து வந்தார். இந்த மூன்று பணிதள பொறுப்பாளர்களுக்கும் மாற்றுப் பொறுப்பாளர்கள் மூன்று பேர் வேலை செய்கின்றார்கள்.
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று நல்லமான் புஞ்சையை சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவர் வெற்றி பெற்று பதவிக்கு வருகின்றார். வந்த உடன் நல்லமான்புஞ்சையை சேர்ந்த கலைவாணி என்ற பணிதள பொறுப்பாளரை வேலைக்கு வரக்கூடாது என்று சண்டைபோட்டு நிறுத்தி விடுகின்றார். கலைவாணியை வேலைக்கு வர அனுமதிக்காதது ஏனென்றால் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கலைவாணியின் கணவர் ஆர்.என்.செல்வராசு என்பவர் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு ராஜாக்கண்ணுவை விட 100 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்து விட்டார். இதனால் உன் கணவர் என்னை எதிர்த்து எப்படி தேர்தலில் போட்டியிட்டார். உங்களால் எனக்கு 30 லட்சம் செலவாகி விட்டது. உன் கணவர் என்னை எதிர்த்து நிற்காவிட்டால் எனக்கு இவ்வளவு செலவும், சிரமமும் இருந்திருக்காது. என்வே உன்னை வேலைக்கு வர அனுமதிக்க மாட்டேன் என்று கலைவாணியை வேலையை விட்டு நிறுத்தி விட்டார். கலைவாணி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சென்று கேட்டதற்கு நான் தலைவரிடம் சொல்லிவிட்டேன் அவர் கேட்கவில்லை என்று மழுப்பலாக பதில் சொல்லி 100 நாள் ஆகட்டும் பிறகு நீங்கள் வேலை பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்கள். மூன்று வருடம் ஆகியும் இன்னும் வேலைக்கு அனுமதிக்கவில்லை. கலைவாணிக்கு மாற்று பொறுப்பாளராக வேலை செய்த மாரியம்மாள் என்பவர் தான் இந்த கிளசரை பார்த்து வருகின்றார். தனக்கு வேண்டாதவர் என்பதால் கலைவாணிக்கு மட்டும் 100 நாள் முடிந்து விட்டது என்று சொல்லும் ஙிஞிளி ஊராட்சி செயலாளர், ஊராட்சி தலைவர் மற்ற கிளசரில் உள்ள பாமா, பரமசிவம், சரண்யா, மாரியம்மாள் இவர்களுக்கெல்லாம் 7 வருடங்களாக தொடர்ந்து வேலை செய்கின்றார்களே எப்படி? இவர்கள் 100 நாள் முடிந்த பிறகு வேறு ஒருவருடைய வேலை அட்டையை பயன்படுத்தி தொடர்ந்து ஆள்மாறாட்டம் செய்து வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களின் அக்கவுண்டுக்கு செல்லும் பணத்தை எடுத்துத்தர சொல்லி மோசடி செய்கின்றார்கள். வேறு ஒருவருடைய அட்டையை பயன்படுத்துகின்றார். ஆனால் தொடர்ந்து இவர்களே வேலை நடக்கும் இடத்தில் ஆடம்பரம் செய்கின்றார்கள். இந்த ஆள்மாறாட்டம் செய்யும் குற்றத்துக்கும், பணமோசடி நடக்கும் குற்றத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர், ஙிஞிளி என அனைவரும் உடந்தையாக இருக்கின்றார்கள். 100 நாள் முடிந்த பணிதள பொறுப்பாளர்கள் ஏன் மீட்டிங் வருகின்றீர்கள்? யார் பெயர் பதியப்படுகின்றதோ அவர்கள் தானே வரவேண்டும் என்று யாரும் கேட்பதில்லை. நடக்கும் குற்றங்கள் அனைத்துக்கும் அனைத்து பணியாளர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் என அனைவரும் உடந்தையாக இருக்கின்றார்கள். எனவே கள ஆய்வு செய்து பல வருடங்களாக நடக்கும் பண மோசடியையும் ஆள்மாறாட்டம் செய்து மாற்று நபரின் பெயரில் பணத்தை எடுக்கும் பணிதள பொறுப்பாளர்களையும், இதற்கு உடந்தையாக செயல்படும் அரசு ஊழியர்களையும், ஊராட்சி தலைவரையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். நுண்ணறிவு புலனாய்வு பத்திரிகை சார்பாக ஒட்டங்காடு பஞ்சாயத்தில் கடந்த 29.07.2022 ம் தேதி ஆய்வு செய்த போது இந்த குற்றங்கள் நடப்பது நமது ஆய்வில் தெரியவருகின்றது. ஏழை மக்களுக்காக மத்திய மாநில அரசு ஒதுக்கும் பணத்தை இதுபோல தனி நபர்களால் பணம் கொள்ளையடிக்கப்படுகின்றது. வேண்டாதவர்களை வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லும் இவர்கள், வேண்டிய பணி தள பொறுப்பாளர்கள் செய்யும் தவறுக்கு உடந்தையாக செயல்படுகின்றார்கள். உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் ஆவலோடு எதிர்பார்க்கின்றார்கள். நாமும் எதிர்பார்க்கின்றோம்..