நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பணிகளில் காலியாக உள்ள 1,089 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அந்த அறிவிக்கை விவரம்:
நில அளவைத் துறையில் நில அளவர், வரைவாளர் பணியிடங்கள், ஊரமைப்புத் துறையில் அளவர், உதவி வரைவாளர் பணியிடங்களில் 1,089 இடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக, நில அளவர் பணியில் 798 இடங்களும், வரைவாளர் பணியில் 236 இடங்களும், நகர் ஊரமைப்புத் துறையில் அளவர், உதவி வரைவாளர் பணியிடங்கள் 55-ம் காலியாக உள்ளன. இவற்றுக்கு முதல் www.tnpsc.gov.in இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆக. 27-ஆம் தேதி கடைசி நாளாகும். இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் செப். 1 முதல் முதல் 3-ஆம் தேதி வரை அளிக்கப்படுகிறது.
எழுத்துத் தேர்வு நவ. 6-ஆம் தேதி காலை மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ளது. காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையில், தொழிற்பயிற்சி அடிப்படையிலான தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையில், மொழித் தகுதித் தேர்வும் நடத்தப்படும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/FS%20&%20DM%20English.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.