சென்னையில் புதிய விமான நிலையம் இதற்காக சென்னைக்கு அருகே 4 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் கொடுத்தது. அதன்படி திருப்போரூர், படாளம், பரந்தூர் (காஞ்சிபுரம்), பன்னூர் (திருவள்ளூர்) ஆகிய இடங்கள் அந்தப் பட்டியலில் இடம் பெற்றன. இந்த நான்கு இடங்களையும் விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்து அதில் பரந்தூர், பன்னூர் ஆகிய இடங்களை தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் பரந்தூரில் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் வி.கே. சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். இதற்காக பரந்தூரில் 7,000 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது எனவும் அறிவித்தார்.
புதிதாக அமைக்கப்படும் விமான நிலையம் சென்னை விமான நிலையத்திலிருந்து 75 கிமீ தூரத்தில் இருக்கிறது. புதிய விமான நிலையத்திற்கு மீனம்பாக்கத்திற்கு பயணிக்க ஒன்றரை மணி நேரம் ஆகும்.