சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த டோரிஸ் செமுவா ஒபோவனோ என்ற வீராங்கனை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் செங்கல்பட்டில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீரான நிலையில் அவர் சொந்த ஊருக்கு செல்லும் போது அவரை செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி சுகுணா சிங், IPS., அவர்கள் பூங்கொத்து கொடுத்து விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்தார், அப்போது நைஜீரிய வீராங்கனை மகிழ்ச்சியில் தன்னை உடனிருந்து கவனித்த பெண் உதவி ஆய்வாளர் தேவிகா என்பவரை கட்டிபிடித்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.