ஒட்டுமொத்த தமிழகத்திலும் கஞ்சாவை அடியோடு ஒழிக்க வேண்டும் என தமிழக முதல்வர் சபதமேற்று செயல்பட்டு வரும் நிலையில் பட்டுக்கோட்டை காவல்துறையினர் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட 600 கிலோ கஞ்சாவை பிடித்த சம்பவம் தஞ்சையை பரபரப்பாக்கியுள்ளது.
ஆந்திராவிலிருந்து பட்டுக்கோட்டை வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 700 கிலோ கஞ்சாவை பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பிரித்விராஜ் மேற்பார்வையில் தனிப்படை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான காவல் துறை லாரியை நோட்டமிட்டு பிடித்ததில் சொகுசு அறை தயாரிக்கப்பட்டு அதன் உள்ளே 700 கிலோ மதிப்புள்ள கஞ்சாவை கடத்தி வந்த சம்பவம் காவல் துறை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேராவூரணி காவல் நிலையத்திற்கு விரைந்த தஞ்சை மாவட்ட எஸ்பி ரவளிப்பிரியா இதில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் பிடிக்க வேண்டும் யாரும் தப்பி விடக்கூடாது.
உண்மையான குற்றவாளியை விரைந்து பிடித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி உண்மை குற்றவாளிகளையும் மேலும் இதில் வேறுயாரும் தொடர்பில் இருக்கிறார்களா என்பதை கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.