கோபத்தின் உச்சத்திற்கு செல்லும்போது மௌனத்தின் வலி தெரியும்
கொட்டிவிட்ட வார்த்தைகளால் முட்டிபோட்ட
பிரச்சனைகளில் மௌனத்தின் வலி தெரியும்
குடும்பத்தின் சண்டையிலே மௌனம் சுகமாகும்
கும்பிடும் கோயிலுக்கு சென்றுவந்தால் சுபமாகும்
எதிர்க்காமல் ஏமாற்றாமல் ஏமாறாமல் ஜெயிப்பது மௌனம்
எதிலும் துணிச்சலாய் துவளாமல் வெற்றியாக்குவது மௌனம்
நாவடக்கம் சொல்லடக்கம் மௌனத்தின் தன்னடக்கம்
நல்லடக்கம் வாயடக்கம் பொறுமையால் பூமியடக்கம்
நாள்தோறும் மனக்கடலில் பேரலையாய் பாய்ந்தோடும்
நாசுக்காக நடப்பதை நல்லதாக்கினால் நலம்தரும்
விலகிபோகும் எண்ணங்கள் பழகிபோனால் மௌனம்
விவகாரங்களை மதியால் வென்றிடும் பேராயுதம்