திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் லட்சுமி கிளீனிக் என்ற பெயரில் கிளீனிக் வைத்து நடத்தி வந்த மேற்குவங்கத்தை சேர்ந்த கிருஷ்ணாஆனந்த் என்பவர் உரிய ஆவணங்களின்றி பொது மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கனகராணி தலைமையிலான குழுவினர் அதிரடியாக ஆய்வு செய்தனர்.
அப்போது ஆவணங்களின்றி கிளீனிக் நடத்திவந்தது தெரியவந்தது இதையடுத்து கிருஷ்ணா ஆனந்த் மீது பல்லடம் காவல் நிலையத்தில் இணை இயக்குனர் கனகராணி புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.