தேசிய அளவில் கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி மற்றும் போட்டி – 2022 (AGNI PARIKSHA -VIII) தேசிய பாதுகாப்பு படையினரால் (NSG) ஹரியானாவில் உள்ள மானேசர் NSG முகாமில் 14.11.2022ம் தேதி முதல் 26.11.2022 -ம் தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டுப் பயிற்சி மற்றும் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ள, தமிழ்நாடு கமாண்டோ படையினரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/ படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திர பாபு, மிறிஷி., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்கள்.