தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளி பிரியா IPS அவர்களது உத்தரவின் பெயரில், தஞ்சை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் P.N ராஜா அவர்களின் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைத்து, தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து வாகன திருட்டில் ஈடுபட்டவர்களை கடந்த ஏழு தினங்களாக இரவு பகல் பார்க்காமல் துரிதமாக தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகள் இடம் இருந்து கைப்பற்றப்பட்ட 38 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனுடைய மதிப்பு சுமார் 20 லட்சம் இதில் மிகவும் திறமையாகவும் துரிதமாகவும் தஞ்சை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் தனிப்படையினர்கள் உதவி ஆய்வாளர் ராஜ்கமல், சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன், புகழேந்தி, திருக்குமரன், கோதண்டபாணி ஆகியோர் அடங்கிய தனிப்படையினருக்கு சிறப்பாக பணிபுரிந்தமைக்கு தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுகளை தெரிவித்தனர்.
இவர்களுடன் தஞ்சை மேற்கு காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் சந்திரா அவர்களும் உடன் இருந்தனர்.
குறிப்பாக இந்த 38 வாகனங்களில் ஹீரோ ஹோண்டா வாகனம் மட்டும் 30 வாகனம் உள்ளது. அதனை திருடுவதற்கு ஏதுவாக உள்ளதால் இந்த வாகனத்தை மட்டும் குறி வைத்து திருடப்பட்டு வந்தது என்று குற்றவாளிகள் ஒப்புக்கொண்டனர். நான்கு நபர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.