குடகுமலை தாயிடம் குழந்தையாய் உருவாகி
கொடுத்த நீரையெல்லாம் கொண்டுவரும் நதியாகி
தாய்வீட்டு சீதனத்தோடு தமிழகத்துக்கு மருமகளாகி
தரிசெல்லாம் பசுமையாகி வாழுதம்மா உயிராகி
பாறைகள் இடுக்கினிலே அடக்கத்தோடு கடந்திடுவாய்
பாம்புபோல் பாதையாக்கி கொடியிடையாய் நடந்திடுவாய்
மேட்டூர் தோட்டத்திலே பருவமடைந்த பெண்ணாகி
மருதனுக்கு வாக்கப்பட்டு மண்ணெல்லாம் மணமாகி
தாயும் சேயுமாய் கிளையாறுகளாய் பிரிந்து
தஞ்சையிலே தாராளமாய் பயிர்களுக்கெல்லாம் விருந்து
மணந்தவன் மனதிலே மகழ்ச்சியுடன் வாழ்ந்து
மாசற்றவளாய் காவிரித்தாயாய் கடலிலே கலந்து
- சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்