இன்பமும் துன்பமும் இணைந்து வழிநடத்தும் வாழ்க்கை
இரவும் பகலுமாய் உருவங்களை மாற்றிடும் இயற்கை
வரவும் செலவுமாய் உயிர்களை வகைப்படுத்தும் பூலோகம்
வறுமையும் வசதியும் முயன்றிடும் திறமையின் முடிவாகும்
கால்நடையாய் காலத்தை கடந்தான் கற்கால மனிதன்
கல்வியின் வளர்ச்சியால் எந்திரத்தை இயக்க பழகினான்
கம்பியிலும் வானிலும் விஞ்ஞானத்தை ஓடவிட்டு வளர்ந்தான்
கணிணியின் காலமாக்கிகை பேசிக்குள்ளே உலகத்தை கண்டான்
காடுகளும் கடல்களும் மலைகளும் காலநிலையை கணிக்க
காலத்தையும் நேரத்தையும் மணியையும் மனிதனால் உருவாக்க
மாதங்கள் பணிரெண்டை ஆங்கில வருடமாய் வகுக்க
மலர்ந்திடும் புத்தாண்டு ஜனவரி ஒன்றில் பிறக்க
விளைநிலங்களை விளையவைத்து விவசாயம் காப்போம்
விரட்டிவரும் கொரோனாவை அடியோடு மாய்ப்போம்
புதுப்பொலிவுடன் புறப்பட்டுவரும் புத்தாண்டை வரவேற்போம்
பூவுலகில் வீட்டுக்குவீடு புன்னகை நிறையட்டும்
– சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்