கடந்த 27.12.22 ம் தேதி தாம்பரத்தில் திரு.செந்தில்குமார் வ/41, த/பெ வெள்ளியங்கிரி எண் பிளாட் 25 சிவசக்தி அப்பாட்மென்ட் 2nd floor மணிமேகலை 1வது தெரு, பள்ளிக்கரணை, சென்னை-100 என்பவர் தன்னிடம் எண்.153, இந்திராகாந்தி நகர், காயரம்பேடு, கூடுவாஞ்சேரியை சேர்ந்த பழனிக்குமார் வ/46, த/பெ, முருகன் என்பவர் தான் காவல்துறை மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிவதாகவும், மனுதாரருக்கு வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி பல தவணைகளாக தன்னிடமிருந்து ரூபாய் 14 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டதாகவும், ஆனால் இதுவரை அவர் வீட்டுமனை வாங்கிதராமலும், பணத்தையும் தராமலும் ஏமாற்றி வருவதாகவும் இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரின் பேரில் T1.Tambaram P.S. Cr.No. 970/22 u/s.406,420 IPC வழக்கு பதிவு செய்து, இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் தாம்பரம் ஆணையாளர் திரு.அமல்ராஜ் அவர்களின் உத்தரவின் பேரில் தாம்பரம் துணை ஆணையாளர் திரு.சிபிசக்கரவர்த்தி அவர்களின் மேற்பார்வையில் காவல் உதவி ஆணையர் திரு.ஸ்ரீனிவாசன் தலைமையில் தாம்பரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி ஷகிலா மற்றும் காவலர்களுடன் தனிப்படை அமைக்கப்பட்டு எதிரியை தேடி வந்த நிலையில் எதிரி பழனிக்குமார் வ/46, த/பெ.முருகன் என்பவரை 29.12.2022 ம் தேதி கைது செய்யப்பட்டு விசாரணை செய்த போது விசாரணையில் எதிரி பல நபர்களிடம் இதுபோன்று தான் காவல்துறையில் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிவதாகவும், வீட்டுமனைகள் வாங்கி தருவதாகவும் கூறி பல லட்சம் ரூபாய் ஏமாற்றி பணம் வாங்கியுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், இவ்வழக்கின் எதிரிக்கு கூடுவாஞ்சேரி காவல்நிலைய குற்ற எண் 730/2021, U/s 420, 506(ii) IPC, குற்ற எண் 732/2021 U/s 420, 506(ii) IPC மற்றும் குற்ற எண் 734/2021 U/s 294(b), 307, 386, 397, 420, 506(ii) IPC வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், எதிரியின் மீது சுரேஷ் வ/39 தெ/பெ ஜெயராமன் எண் 2 சுப்பிரமணிய நகர், 1வது தெரு, திருவெற்றியூர் சென்னை-19 என்பவர் தன்னிடம் பல தவணைகளாக ரூபாய் 9,28,000 பணம் வாங்கிகொண்டு வீட்டுமனை வாங்கிதருவதாக கூறி ஏமாற்றியதாக அளித்த புகாரின்பேரில் தாம்பரம் காவல்நிலைய குற்றஎண் 971/2022 U/s 406, 420 IPC வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கிலும் எதிரி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் எதிரியை கைது செய்து சென்னை புழல் மத்தியசிறையில் அடைக்கப்பட்டார்.