பதிமூன்று பத்துக்கோடி மக்கள் கொண்ட
ஆட்சியுண்டு ஆசியாவில் சீனர் நாட்டில்
அதிகரித்த சனத்தொகையை குறைப்பதற்கு
பேரழிவை யுண்டாக்கி ரசித்து பார்த்தார்
சதிவழியில் கோலோச்சும் சீனத் தரசே
சாகடித்த மக்கள் தொகை பல லட்சமே
அதிவிரைவில் மறைந்திடுமா நீதியின் பார்வை
அறவழியில் நடக்க புத்தர் தத்துவம் பாரு
உதித்துவருங் கீழ்த்திசையில் சூரியன்கூட
உணர்திடும் எம்தாய் நாட்டின் ஆட்சிமுறையை
நிதியின்றித் தவிக்கின்ற சீனர் வாழ்விலே
நீதிநெஞ்சில் நிலைக்குமா வறுமை ஆளயிலே
விதிவழியில் நடப்பதற்கு மதிவேண்டுமே
வீண்வம்பை இழுப்பதுவும் அழிவை தேடியே
இதையெல்லா மறிந்துநீ திருந்தி நடக்க
இருக்கா தறிஉமக்கு எழுபிறப்பிலும்
சத்தியத்தின் தோட்டமெங்கள் பாரத நாடு
சன்மார்க்க பூங்கா அரசாட்சியின் வீடு
அத்துமீறி எல்லை தாண்டும் அநியாயத்தை
அறிந்திருந்தும் ஏனிந்த தயக்க மின்னும்
புத்தர் பிறந்த பூமியது புண்ணியங் கூடும்
அதை பாவ பூமியாக்கிடாமல் நன்மையை தேடு
நேருக்குநேர் மோததுற்கு நெஞ்சிலுரமில்லை
நித்தநித்த எல்லைப்படையை சீண்டிப் பார்ப்பதா
போரென்றால் புலிக்குணமெங்கள் ராணுவ படைகள்
புறங்காட்டு மரபல்ல வரலாரியம்பும்
சீறிப்பாயும் வெகுதூரம் ஏவுகணைகள்
அதன் சீற்றத்தை தாங்கிடுமா சீனத்தரசு
சீரொழுக வீற்றிருப்பாள் பாரத அன்னை
செருவென்றால் வீறுகொள்வாள் எரிமலையாக
போர்தொடுக்க முயல்கின்றாள் நாணமின்றி
புத்தசொல்ல எந்நாட்டார் போதா தின்னும்
வேறுநாட்டார் சொன்னாலுங் கேட்க தந்த
வேந்தனுக்கு இறுதியிலே வீழ்ச்சி யன்றோ?
– சி.அடைக்கலம்,
நெய்வேலி வடபாதி,
பள்ளத்தான்மனை