குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில், உடனுக்குடன் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என திருப்பூர் போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற பிரவீன்குமார் அபினபு தெரிவித்தார்.
திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரபாகரன் கடந்த வாரம் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சேலம் சரக டி.ஐ.ஜி.,யாக இருந்த பிரவீன்குமார் அபினபு, ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்று திருப்பூர் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். திருப்பூர் போலீஸ் கமிஷனராக நேற்று காலை பிரவீன்குமார் அபினபு பொறுப்பேற்று கொண்டார். கமிஷனருக்கு, துணை கமிஷனர், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
புதிய போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு கூறுகையில், ”மாநகர ஸ்டேஷன்களில் வரும் புகார்களை உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் உடனுக்குடன் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால், போலீஸ் தரப்பில், நகருக்கு என்ன தேவை என்பதை அறிந்து செய்யப்படும்” என்றார்.
போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுள்ள பிரவீன்குமார் அபினபு, 2001ல் பி.டெக்., பட்டப்படிப்பை முடித்தார். 2004ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ்., மற்றும் 2005ல் ஐ.பி.எஸ்., முடித்து பணியில் சேர்ந்தார். கடலூர், திருவாரூர், மதுரையில் ஏ.எஸ்.பி.,யாக பணிபுரிந்தார்.
அதன்பின், திருவாரூர், கரூர், தேனி மற்றும் சென்னை சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி.,யாகவும் மற்றும் கவர்னர் தலைமை பாதுகாப்பு அதிகாரியாகவும் இருந்தார். டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி, சேலம் சரகத்தில் பணியாற்றினார். 2018ம் ஆண்டில் சிறந்த பணிக்காக அண்ணா பதக்கம் பெற்றார்.
‘குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில், உடனுக்குடன் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என திருப்பூர் போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற பிரவீன்குமார் அபினபு தெரிவித்தார். திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரபாகரன் கடந்த வாரம் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சேலம் சரக டி.ஐ.ஜி.,யாக இருந்த பிரவீன்குமார் அபினபு, ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்று திருப்பூர் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். திருப்பூர் போலீஸ் கமிஷனராக பிரவீன்குமார் அபினபு பொறுப்பேற்று கொண்டார். கமிஷனருக்கு, துணை கமிஷனர், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
புதிய போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு கூறுகையில், ”மாநகர ஸ்டேஷன்களில் வரும் புகார்களை உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் உடனுக்குடன் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால், போலீஸ் தரப்பில், நகருக்கு என்ன தேவை என்பதை அறிந்து செய்யப்படும்” என்றார்.