செடியில் பூத்தமலர்களெல்லாம்
சொந்தந்தேடுது அதை
சுவைத்து மகிழ வண்டுயினம்
ஏங்கித் தவிக்குது
செடியில் பூத்தமலர்களெல்லாம்
சொந்தந் தேடுது
அணைக்கத் துடிக்கும் ஆண்கள்மனம்
அலைமோதுது பெண்ணை
ஆசைகாட்டி காதல்வலையில்
சிக்க வைக்குது
வண்டைப்போல மனிதருண்டு
வையகத்திலே பெண்கள்
வாழ்வை சிதைக்க வட்டமிடுவர்
தினமும் உலகிலே
செடியில் பூத்தமலர்க ளெல்லாம்
சொந்தந் தேடுது
தங்கநிலா வானத்திலே
தவழ்ந்து செல்லுது அதன்
தனிமை கண்டு கவிஞனுள்ளம்
காதல் கொள்ளுது
கற்பனைக்கு விருந்தளிக்கும்
கன்னி உருவிலே நேரில்
காணும்போது கவிதை பொங்கும்
கவிஞன் நெஞ்சிலே
செடியில் பூத்தமலர்களெல்லாம்
சொந்தந் தேடுது
– சி.அடைக்கலம், நெய்வேலி வடபாதி,
பள்ளத்தான்மனை