ஏர் கண்டிஷனர் உபயோகப்படுத்துபவருக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் குளிர்சாதனம் பேட்டி பற்றி நல்ல படித்து நல்ல திறன் உள்ளவர்களாகவும் நல்ல திறன் உள்ள நிறுவனத்தில் வேலை புரிகிறவர்களாகவும் இருப்பவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்த வேலையை தருமானால் கீழ் கண்ட விபத்தை தவிர்க்கலாம் குறைந்த பணத்தில் சர்வீஸ் செய்யவும் நபர்களை கொண்டு செய்தால் அந்த சர்வீஸ் செய்யும் டெக்னீசியனுக்கும் சரியான படிப்பறிவு இல்லாத செயல்முறை தெரியாத நபர்களால் இது நேர்ந்துவிடுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தைச் சேர்ந்த மணிமாறன் வீட்டில், ‘ஏசி’ பழுதானது. கும்பகோணத்தில் உள்ள தனியார் ஏஜன்சியில் பணியாற்றும், தாராசுரம் பகுதியைச் சேர்ந்த சேக்லாவுதீன், 24, கணேஷ், 23, ஆகியோர், மணிமாறன் வீட்டுக்கு சென்று, பழுதடைந்த ‘ஏசி’யில் உள்ள சிலிண்டரில், காஸ் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக காஸ் சிலிண்டர் வெடித்தது.
இதில், சேக்லாவுதீன், கணேஷ் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு, ஆம்புலன்சில் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். வழியில் கணேஷ் இறந்தார். படுகாயமடைந்த சேக்லாவுதீன், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை பெறுகிறார். திருநீலக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.