சென்னை அம்பத்தூர் போக்குவரத்து போலீஸ் எல்லைக்குள் உள்ள அம்பத்தூர் 1 வாவின் சந்திப்பில் சூரியசக்தி மூலம் இயங்கும் தானியங்கி போக்குவரத்து சிக்னல் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல், சிரமமின்றி முறையாக சாலையை கடந்து செல்ல முடியும். சூரிய ஒளி மூலம் சக்தி பெற்று 24 மணிநேரமும் வேலை செய்யக்கூடியதாக இருக்கும். இது தமிழகத்திலேயே முதல் முறையாக அம்பத்தூரில் சூரிய சக்தியில் இயங்கும் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிட்டது.
இந்த போக்குவரத்து சிக்னலை ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். அப்போது அவருடன் துணை கமிஷனர் ஜெயலட்சுமி, உதவி கமிஷனர் மலைச்சாமி மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.