பொன்னமராவதி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடபட்டு வந்ததாக காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவின்படி பொன்னமராவதி காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், காவல் ஆய்வாளர் தனபாலன், உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவரிடமிருந்து இருசக்கர வாகனங்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். இதில் சிறப்பாக செயல்பட்ட பொன்னமராவதி காவல் நிலைய தலைமை காவலர் செந்தில் மற்றும் காவலர்கள் விக்னேஷ்குமார், வரதராஜன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் அழைத்து பாராட்டி பாராட்டு நற்சான்றிதழ் வழங்கினார்.