திருப்பூர் மாநகரம் கே.வி.ஆர் நகர் சரக எல்லைக்குட்பட்ட தெற்கு காவல் நிலையத்தில் 25.03.2023 தேதி மாலை 17.30 மணிக்கு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் பிரசவ வார்டில் பிறந்த ஏழு நாட்களேயான பச்சிளம் ஆண் குழந்தையை சுமார் 35 வயது பெண்மணி இரண்டு நாட்கள் மருத்துவமணையில் பிரசவ வார்டில் தன் மனைவி சத்யாவிடமும் தனது தாயார் மாலாவுடனும் நட்புடன் பழகி வந்து தன் மனைவியையும் தாயாரையும் ஏமாற்றிவிட்டு அரசு மருத்துவமணையிலிருந்து குழந்தையை எடுத்து கொண்டு கடத்தி சென்றுவிட்டதாக வாதி கோபி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டது.
திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் திரு. பிரவின்குமார் அபினபு, இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் தெற்கு திருமதி.வனிதா.TPS அவர்களின் மேற்பார்வையில், உதவி ஆணையாளர் கே.வி.ஆர் நகர் திரு சி.கார்த்திகேயன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் திரு.பிச்சையா, திரு.ரத்தினக்குமார், திருமதி சிவசங்கரி, உதவிஆய்வாளர் திரு.விஜயக்குமார், திரு.காளிமுத்து, ஆகியோர் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
புலன் விசாரணையில் தெற்கு காவல் நிலைய சரக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணை, சந்திராபுரம், புதூர்பிரிவு, பழைய பேருந்து நிலையம், மாநகராட்சி அலுவலக சந்திப்பு, புஷ்பா பேருந்து நிறுத்தம், ஆகிய இடங்களில் இருந்த CCTV கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்ததிலும் சாட்சிகள் விசாரணை அடிப்படையிலும் தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலும் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட பாண்டியம்மாள் என்பவரை குழந்தை கடத்தப்பட்ட 12 மணி நேரத்தில் பிடித்தும் பச்சிளம் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமணையில் முதலுதவி சிகிச்சைக்கு வேண்டி குழந்தையின் தாய் திருமதி.சத்யாவிடம் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி முதல்வர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.
பிறந்த ஏழே நாட்களான பச்சிளம் ஆண் குழந்தை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் கடத்தப்பட்ட மேற்படி குற்ற வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து வழக்கு பதிவு செய்யப்பட்ட 12 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்தும் பச்சிளம் குழந்தையை மீட்ட திருப்பூர் மாநகர காவல் துறையின் பணியினை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள். வழக்கு பதிவு செய்யப்பட்ட 12 மணி நேரத்திற்குள் திறம்பட புலன் விசாரணை செய்து குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்த காவல்துறை அதிகாரிகள், தலைமை காவலர் சங்கரநாராயணன் மற்றும் தனிப்படையினரை மாநகர காவல் ஆணையாளர் திரு பிரவின்குமார் அபினபு, இ.கா.ப அவர்கள் பாராட்டினார்கள்.