தமிழ்நாடு அரசு 03.03.2023 -ம் தேதி வெளியிட்ட அரசாணையின்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற காவலர் நல வாரியத்திற்கான விதிமுறைகள், நடவடிக்கைகள், நலத்திட்டங்கள் போன்றவற்றை இறுதி செய்ய முதல் கூட்டத்தினை 21.03.2023 -ம் தேதி டிஜிபி அலுவலகத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடந்தது. இக்குழுவில் ஓய்வு பெற்ற அதிகாரிகள், துணை ஆணையர் திரு.ஆர் சின்னராஜ், காவல் கண்காணிப்பாளர் திரு.என் தாமோதரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.முரளி, அரசு பிரதிநிதி திருமதி வைதேகி மற்றும் நிதி நிர்வாகி திருமதி சுமதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.