மணப்பெண் மங்கையாய் மானிடவுலகில் அவதரித்து
மாதர்குல பெண்மணியாய் பெண்வுலகில் சித்தரித்து
மண்ணுலகம் வாழ்ந்திட வரம்பெற்ற மகராசி
மனிதகுலம் தழைத்திட உரமாகும் ஜீவராசி
கர்ப்பபை தொட்டிலில் கண்யர்ந்தோம் சிலமாதங்கள்
கன்னிப்பை விடைகொடுத்து உலாவினோம் பலமாதங்கள்
கல்விப்பை கையில்கொடுத்து கற்றோம் சிலகாலங்கள்
கடமைபை தோளில்சுமந்து விடைபெற்றோம் இறுதிகாலங்கள்
எலும்பையும் சதையையும் ஒன்றோடுஒன்றாய் இணைத்து
எல்லாத்தையும் இயக்கிட இதயத்திடம் கொடுத்து
அங்கங்கள் நரம்புகள் மூட்டுகளோடு பிணைத்து
அசைத்திடும் காற்றினை உடலுக்குள் நுழைத்து
அன்பான உருவமாய் ஆக்கினாள் அன்னை
ஆளுகின்ற சந்ததிகளாக உருவாக்கினாள் நம்மை
- சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்