தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருவோணம் சந்தையில் விற்க வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கேட் பணம் என்ற பெயரில் கொள்ளையடிக்கப்படுகிறது. எந்த ஒரு ரசீதும் இல்லாமல் பொது மக்களை மிரட்டி அதிகார தோரணையில் பணம் பறிக்கப்படுகிறது. இதனை கேள்வி கேட்போரிடம், “கோவில் நிர்வாகம் எங்களை இப்படித்தான் வசூல் செய்ய சொல்லி இருக்கிறார்கள்” என்று பதில் தருகிறார்கள். இதனை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பார்களா..?