தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.T.சாம்சன், IPS ., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் செல்போன்கள் காணாமல் போனதாக தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வந்த புகார்களின் அடிப்படையில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தனராஜ் கணேஷ் அவர்களின் தலைமையில் காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி அவர்கள் மற்றும் சைபர் கிரைம் காவல்துறையினரின் துரித நடவடிக்கையின் மூலம் தொலைந்த மற்றும் தவறவிட்ட ரூபாய் 13 லட்சம் மதிப்பிலான 80 செல்போன்கள் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் தென்காசியில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஒப்படைத்தார்.