அண்ணா பேச்சின் இனிமையிலே
அருவி உறங்கிடும்
அதைக்கேட்டு மக்கள் கூட்டம்
அயர்ந்துறங்க மறந்திடும்
வண்ணத் தமிழின் தூய்மை என்றும்
குறைவ தில்லையே
அதைப் பார்க்க வந்த மொழிகளெல்லாம்
வெட்கி நின்றது
தென்னவரின் நீதிகாக்க தமிழ்த்
தாயிருக்குது அதை
செகமறிய ஒலித்துக்காட்ட
சிலம்பி ருக்குது
மன்னவரின் மாண்பு காக்க
நீதிருக்குது அந்த
நீதிக்குத் தலைவணங்கத் தினம்
நிலமக ளிருக்கு
பாரினிலே பழமையான
மொழிகள் நான்கு அதில்
முதன்மையானது தமிழென்று
சரித்திரஞ் சொல்லும்
தென்பொதிகைத் தென்றல் வந்தது
வடபுலத் திற்கு
வடவேங்கட மலையில்
மூன்றுக் கொடிகளசைந்து
வருக வருக என்றதனை
வரவேற்ற தாம்
– சி.அடைக்கலம்,
நெய்வேலி வடபாதி,
பள்ளத்தான்மனை