தஞ்சை மாவட்டம் போக்குவரத்து ஆய்வாளராக பணிபுரிந்து வரும் எம்ஜி ரவிச்சந்திரன் அவர்கள் தான் மக்கள் பணியை மகேசன் பனி என்று மக்களுக்கு உதவி செய்து கதாநாயகனாக விளங்கி வருகிறார்.
தஞ்சை நகர போக்குவரத்து ஒழுங்கு பிரிவு மற்றும் ஜோதி அறக்கட்டளை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே நடந்தது. தஞ்சை நகர போக்குவரத்து ஒழுங்குபிரிவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து சாலை விதிகளை மதித்து வந்தவர்களுக்கு நூதன முறையில் தலா 1 கிலோ தக்காளி இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சமீபத்தில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் தன் கணவருடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வாகனம் பழுதடைந்து. வழியில் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணை பார்த்த ஆய்வாளர் தன் வாகனத்தில் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதேபோன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் தலைக்கவசம் அணியாமல் ரோட்டில் தண்ணீர் ஊற்றிக் கொண்டு சென்ற இளைஞரை கண்டறிந்து இது போன்ற தவறான உதாரணங்களில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரித்து அறிவுரை கூறிய அனுப்பி வைத்தார்.
மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூகப் பணிகளை செய்யும் இயக்கங்களை ஒருங்கிணைத்து மாணவர்களுக்காக சாலை போக்குவரத்து விதிகள் மற்றும் அவசர காலத்தில் பின்பற்ற வேண்டிய முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இது போன்ற சமூக அக்கறை கொண்ட செயல்களை தொடர்ந்து செய்து வரும் போக்குவரத்து ஆய்வாளர் எம்ஜி ரவிச்சந்திரன் அவர்களுக்கு நீதியின் நுண்ணறிவு குழுமம் சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.