சமூக ஆர்வலர் வீரக்குறிச்சி எஸ்.அருள்சூசை தனது உரையில் பட்டுக்கோட்டையை சுற்றி 84 கிராமங்கள் உள்ளன. இதில் ஒரு ஆண்டிற்கு 2 வழக்கறிஞர்கள், 2 டாக்டர்கள், 84 ஐஏஎஸ்களை உருவாக்க முயற்சி செய்து வருகிறேன். 12ம் வகுப்பு முடிந்துவிட்டு வழக்கறிஞர்கள், டாக்டராக படிக்கும் மாணவ – மாணவியர்களுக்கு அனைத்து படிப்பு செலவையும் தானே ஏற்பதாக உறுதியளித்தார். 84 கிராமங்களுக்கும் தனது சொந்த செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்க இருப்பதாகவும் தனது உரையில் கூறினார்.