நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் அடுத்த புஷ்பவனம் கடற்கரை அருகே தேத்தாக்குடி தெற்கு பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மனைவி துர்கா தேவி என்பவர் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்ததாக புஷ்பவனம் கிராம நிர்வாக அலுவலர் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகை காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் உத்தரவின் பேரில் வேதாரணியம் காவல் துணை கண்காணிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் காவல் ஆய்வாளர் பசுபதி மற்றும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு புஷ்பவனம் அழகு கவுண்டர் காட்டைச் சேர்ந்த சேர்ந்த சுந்தர வடிவேலு மகன் அருண் என்பவரை தென்னம்புலம் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் கைது செய்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய அவரது SUZUKI CELERIO என்ற நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்தனர்.