T1 தாம்பரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காட்டன் என்று அழைக்கப்படுகிற தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி வியாபாரம் நடப்பதாக தகவல் வந்தது. அதனையடுத்து, லாட்டரி சீட்டினை அறவே ஒழிக்க வேண்டுமென்றும் இதுபோன்ற குற்றங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க, குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்க நடைவடிக்கை எடுக்க வேண்டி. இது சம்பந்தமான குற்றங்கள் கண்காணித்து குற்றவாளிகளை கைது செய்ய தாம்பரம் மாநகர காவல் ஆணையர் திரு.A.அமல்ராஜ் I.P.S., அவர்களின் உத்திரவுப்படியும், காவல் இணை ஆணையர், திரு.PA.மூர்த்தி, I.P.S., அவர்களின் அறிவுரையின் படியும், காவல் துணை ஆணையர் திரு.K.அதிவீரபாண்டியன், அவர்களின் மேற்பார்வையில் காவல் உதவி ஆணையர், திரு.S.A.சீனிவாசன் அவர்களின் தலைமையில் T1 ஆய்வாளர் திரு.சி.சார்லஸ், உதவி ஆய்வாளர் திரு.கன்னியப்பன், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வீராச்சாமி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் காட்டன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் குற்றவாளிகளை பற்றி விசாரணை செய்து வந்த நிலையில் தகவலின் பேரில் 25.07.2022 ஆம் தேதி பகல் 12.00 மணியளவில் மேற்கு தாம்பரம் ராஜாஜி ரோடு, GST ரோடு சந்திப்பில் சந்தேகத்திற்குரிய நபர்களை விசாரணை செய்ததில் 1.செந்தில்குமார் (61) அப்துல்லா மற்றும் 2.மணிகண்ணன், ஆகிய இருவரும் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. அவர்கள் மீது ஜிமி தாம்பரம் காவல் நிலைய குற்ற எண் 512/2023 ச/பி 341,294(தீ),397,336,427,506(II) இ.த.ச வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்த மூன்று மற்றும் நான்கு இலக்க எண்களை கொண்ட காட்டன் லாட்டரி எனப்படும் துண்டு சீட்டுகளும் கைபற்றப்பட்டது, பின்பு அவர்களிடம் இருந்து ரூபாய் 8 லட்சம் பணம் உட்பட BOLERO கார், இருசக்கர வாகனம் மற்றும் கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.