நீலகிரி மாவட்டம் குன்னூரில் முதல் முறையாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிர நடைபெற்றது, இந்நிகழ்ச்சியை நீலகிரி மாவட்ட எஸ்பி முனைவர் பிரபாகர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி சௌந்தர்ராஜன் குன்னூர் டிஎஸ்பி குமார் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் மாணவியர், பள்ளி மாணவ மாணவிகள் குழந்தைகள் உற்சாகமாக நடனங்கள் ஆடி பாடல்கள் பாடி கொண்டாடினர்.
மேலும் பரத நாட்டியம் கராத்தே சிலம்பும் ஹாக்கி சதுரங்க போட்டி மற்றும் குழந்தைகள் மாறுவேடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். மாவட்ட எஸ்பி முனைவர் பிரபாகர் அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டு சிறப்பாக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.