அன்று அந்நிய அடக்குமுறைகள்
இன்று சாதி, மத அடக்குமுறைகள்
அன்று சர்வாதிகாரக் கொடுமைகள்
இன்று தீண்டாமைக் கொடுமைகள்
அன்று அந்நிய அச்சுறுத்தல்கள்
இன்று வன்முறை அச்சுறுத்தல்கள்
அன்று பஞ்சம் பட்டினி சாவுகள்
இன்று விவசாயத் தற்கொலைகள்
அன்று குழந்தை திருமணங்கள்
இன்று குழந்தை தொழிலாளர்கள்
அன்று குலக்கல்வி முறைகள்
இன்று ரொக்கக் கல்வி முறைகள்
அன்று வீடுகளின் கழிவுகள்
இன்று தொழிற்சாலைகளின் அணுக்கழிவுகள்
அன்று தொழில்நுட்பப் பற்றாக்குறைகள்
இன்று அதுவே பெரும் குறைகள்
அன்று பேருந்து இல்லா ஊர்கள்
இன்று நற்சாலை இல்லா ஊர்கள்
அன்று அந்நிய அடிமைத்தனங்கள்
இன்று பெண்ணடிமைத்தனங்கள்
அன்று வேலை தேடும் இளைஞர்கள்
இன்று வேலை இழக்கும் இளைஞர்கள்
அன்று அந்நியர் சுரண்டல்கள்
இன்று இந்தியர் சுரண்டல்கள்
அன்றும் இன்றும் நாட்டில் மாற்றம் எங்கே
இதில் நாடு முழு விடுதலை அடைந்ததெங்கே!!
அன்று வெடித்தது
ஒரு விடுதலைப் போராட்டம் மண்ணில்
இன்று வெடிக்கட்டும்
பல அகப்போராட்டங்கள் நம்மில்!!
நாட்டின் இத்தடைகளனைத்தும்
சிறகுகளாய் பறக்கட்டும்
நம் நாட்டின் கொடி இனி முழு விடுதலைக்காற்றில் பறக்கட்டும்!!
– மீனாட்சி வெங்கடேஷ்