கோயம்புத்தூர் பிஎஸ்ஜி டெக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் இருவர் தங்களின் எண்ணம், செயல்கள் அனைத்திலும் ஒத்துப்போக படித்து வந்தனர். ஒரே அலைவரிசையை பகிர்ந்து கொண்ட இவர்கள் கல்லூரி வாழ்க்கை முடிந்தப்பின் வெவ்வேறு நிறுவனங்களில் பணிகளைப் பெற்று தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.
வாய்ப்பு கதவைத் தட்டியதும் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான அதே நிறுவனத்தில் வித்தியாசமாக சிந்தனைகளோடு சில விஷயங்களை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையுடன் பரஸ்பரமிக்க சக ஊழியர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவுடன் இணைந்து பணியாற்ற தொடங்கினர். இருவரும் இணைந்து 2014ல் Z SYSTEM என்ற நிறுவனத்தை தொடங்குகிறார்கள். ஒருவர் முழுநேர பணியை கவனித்துக் கொள்ள, இன்னொருவர் வெளியில் இருந்து நிறுவனத்திற்கு உறுதுணையாக செயல்பட்டார்.
அந்த நிறுவனத்தை ஒரு புகழ்பெற்ற மற்றும் மிகவும் அவருக்கு பிடித்தமான ஆட்டோமேஷன், எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் துறைகளில் ஒரு புதிய அத்தியாயம் இந்நிறுவனம் படைக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டு செயல்பட்டார். அதற்கேற்ப இந்த நிறுவனமானது தனது மூன்றாம் ஆண்டில் ஒரு கோடி விற்று முதல் (Turn Over) என்ற முதல் மைல்கல்லை எட்டியது. மேலும் இந்த நிறுவனத்துக்கு பலம் சேர்க்கும் விதமாக ஐந்தாம் ஆண்டில் பக்கபலமாக தனது நண்பனும் இந்த நிறுவனத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.
இவ்வாறாக சிறப்பாக செயல்படுகின்ற நிறுவனம் 2022ல் ரூபாய் ஒரு கோடி மதிக்கத்தக்க ஒப்பந்தத்தை பெரிய நிறுவனத்தில் இருந்து பெறுகிறது. கெம்ஃபாப் அல்கலிஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட அதன் முதல் ஆர்டரில் இருந்து இன்றுவரை Z SYSTEM வாடிக்கையாளரின் எண்ணங்களைத் தாண்டியும் அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. ஆண்டுகள் நகர நகர இந்த நிறுவனம் பல உலகளாவிய நிறுவனங்களின் தலைமையின் நம்பிக்கையை வென்று பல வெற்றிகரமான திட்டங்களை வழங்கி வருகிறது.
தங்களது கள அறிவு மற்றும் திட்டங்களின் வெற்றிகரமான பதிவு ஆகியவை மூலமாக சீமென்ஸ் ஆட்டோமேஷன் தயாரிப்புகள், அஸ்பில் மற்றும் டர்க் தயாரிப்புகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட சேனல் பார்ட்னராக Z SYSTEM செயல்பட்டு வருகிறது. நம்பகமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தீர்வுகள் இந்நிறுவனத்தினால் வழங்கப்படுகின்றன.
இந்த நிறுவனத்தின் பல்வேறு புதிய சிந்தனைகள் மற்றும் விவேகத்துடன் கூடிய செயல்பாட்டினால் தங்களின் ஒன்பதாம் ஆண்டில் தங்களது விற்பனை மதிப்பை பத்து கோடியாக எட்டியுள்ளது.
இருவரால் 2014ல் தொடங்கிய இந்த நிறுவனமானது இளம் தலைமுறையினரின் திறமைகளால் வளர்ந்து இன்று இந்த 2023ல் 18 பேர் கொண்ட ஒரு சக்தி வாய்ந்த அணியை பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த நிறுவனம் இங்கு பணிபுரிபவர்களையே தனது சொத்தாக எண்ணி வருகின்றது.
இந்த Z SYSTEM அணியானது Development, Testing and Commissioning of Instrumentation, Sensor and Scada System-ல் தங்களை தலைசிறந்த நிபுணர்களாக இந்த உலகிற்கு வெளிப்படுத்தி வருகின்றார்கள்.
மின்கட்டுபாட்டு பேனல்களை வடிவமைப்பதில் மற்றும் தயாரிப்பதில் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறி வருகின்றது. மேலும் கடந்த பத்து ஆண்டுகளாக Z System விரிவான மற்றும் தரமான தொழில்துறை ஆட்டோமேஷன் தீர்வுகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது.
தற்பொழுது இந்த நிறுவனமானது பெருநிறுவன கட்டிடம் ஒன்றை உருவாக்கிக் கொண்டு வருகிறது. தங்களது நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும்விதமாக இரண்டு சக்கர வாகனம் மற்றும் கார்களை வாங்கி பரிசளித்துள்ளனர்.
எதிர்காலத்தில் இந்த நிறுவனமானது பல சவால்களையும் சந்தித்து அவற்றை முறியடிக்கும் வண்ணமாக தங்களது படைப்புகளை திறமைகொண்ட தங்களது பணியாளர்கள் மூலமாக நல்ல தரத்தோடும் வித்தியாசமான வடிவமைப்புகளோடு உரிய நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒரு தனித்துவமிக்க பெருநிறுவனமாக இந்த Z System அமையும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை. வாழ்த்துக்கள்…