தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உட்கோட்டம் கும்பகோணம் மேற்கு காவல் பகுதியில் காவல் ஆய்வாளர் திரு.அழகேசன் அவர்கள் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் திரு.சுபாஷ் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபடும்போது, கும்பகோணம் சில்வர் நகர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் நான்கு சக்கர வாகனத்தை சோதனை செய்யும்போது சட்டத்திற்கு புறம்பாக கடத்தி வரப்பட்ட போதைப்பொருளான சுமார் 505 கிலோகிராம் குட்கா மற்றும் அவரது காரினை பறிமுதல் செய்து, குற்றவாளியினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.