சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சந்தீப் ராய் ரத்தோர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த S1 புனித தோமையார் மலை காவல் நிலைய அதிகாரிகள், S7 மடிப்பாக்கம் காவல் நிலைய அதிகாரிகள், W17 செம்பியன் காவல் நிலைய அதிகாரிகள், J6 திருவான்மியூர் காவல் நிலைய அதிகாரிகள், K6 டிவி சத்திரம் காவல் நிலைய அதிகாரிகள், E1 மயிலாப்பூர் காவல் நிலைய அதிகாரிகள், K11 சிஎம்பிடி காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் E2 ராயப்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் என மொத்தம் 20 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.