ஆனந்த மேகங்களை ஆடையாய் அணிந்து
ஆகாய குளத்திலே ஆடைகளை களைந்து
சுற்றிவரும் சூரியனை திரைக்குள் மறைத்து
சுகமாய் குளிக்கிறாள் இளையநிலா மிதந்து
வானகத்து வட்டநிலா சாமத்திலே திரிகிறாள்
வையகத்தை உறங்கவைத்து வானுலகில் குளிர்கிறாள்
நீலவானம் இருளாக வெண்ணிலா மலர்ந்தாள்
நீலவானத்தை அலங்கரிக்க நட்சத்திரங்களை சூடினாள்
மாலைநேர சோலைநிலாவுக்கு முகில்கள் ஊர்வலம்
மஞ்சத்தில் மஞ்சள்நிலாவுக்கு விண்ணிலே மணக்கோலம்
பூமியிலே பூவெடுத்து விண்கலத்தில் பயணம்
பூச்சூட செயற்கைகோள் சந்திராயனில் பரிசம்
செயற்கைகோள் சிம்மாசனத்தில் தமிழர்களே அதிகம்
சிவன்மயில்சாமி வனிதா வீரமுத்துவேல் ஆதிக்கம்
எண்ணியது நடந்தேறியது நிலாவிலே இந்தியர்கள்
எண்ணம்போல் பூச்சூடியது தமிழக சந்திராயன்கள்
– சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்