24.08.2023 தேதி இரவு 07.00 மணிக்கு புகார்தாரர் அசோக்குமார் என்பவர் தாம்பரம் காவல் நிலையத்தில் தான் மகேந்திரா சிட்டியில் வேலைபார்த்து வருவதாகவும் தன்னுடைய KA51W5021 Pulsar 135 CC இருசக்கர வாகனத்தை இந்துமிஷன் மருத்துவமனை முன்பு 23/08/2023ம் தேதி காலை 09.30 மணிக்கு நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றதாகவும் அன்றிரவு 09.45 மணிக்கு திரும்பிவந்து பார்த்தபோது தன்னுடைய வாகனத்தை காணவில்லை. காணாமல் போன வண்டியை கண்டுபிடித்து தருமாறு கொடுத்த புகார் மீது தாம்பரம் காவல் நிலைய வழக்கு எண்.609/23 ச/பி 379 இதசவில் பதிவு செய்யப்பட்டு மேற்படி எதிரியை பிடிக்க தாம்பரம் மாவட்ட காவல் ஆணையாளர் அமல்ராஜ் இ.கா.ப. அவர்களின் உத்தரவின்படி தாம்பரம் காவல் இணைஆணையாளர் மூர்த்தி அவர்களின் ஆணைக்கினங்க தாம்பரம் மாவட்ட காவல் துணைஆணையாளர் அ.பவன்குமார் ரெட்டி மேற்பார்வையில் தாம்பரம் காவல் உதவிஆணையாளர் தலைமையில் தாம்பரம் காவல் நிலையகுற்றப்பிரிவு ஆய்வாளர் சகிலா மற்றும் தனிப்படையினர் எதிரியை தேடிசம்பவ இடம் சென்று CCTV Footage பதிவுகளை ஆராய்ந்து கண்காணித்து எதிரியை அடையாளம் கண்டு தேடிவந்த நிலையில் எதிரியான வெற்றிவேல் என்பவரை தாம்பம் இந்துமிஷன் மருத்துவமனை அருகே வந்தவரை அடையாளம் கண்டு கைது செய்யப்பட்டார். அவரை விசாரணை செய்ததில் இதேபோன்று இந்துமிஷன் மருத்துவமனை அருகே சுமார் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை திருடியுள்ளார் என்றும் அவர் ஒரு மெக்கானிக் என்பதால் திருடிய வண்டிகளை தனித்தனியாக பிரித்து காயிலான் கடையில் விற்றது தெரியவந்தது.
மேலும் எதிரியிடமிருந்து தாம்பரம் காவல் நிலைய குற்ற எண்கள் 510/23 ச/பி 379 இதச, 609/23 ச/பி 379 இதச, மற்றும் 425/23 ச/பி 379 இதச, வழக்கின் சொத்துக்களை கைப்பற்றியும், மேலும் எதிரியின் மீது தாம்பரம் காவல் நிலைய குற்ற எண்கள் 412/23 ச/பி 379 இதச, 315/23 ச/பி 379 இதச, 388/23 ச/பி 379 இதச, 468/23 ச/பி 379 இதச, 513/23 ச/பி 379 இதச, 532/23 ச/பி 379 இதச வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளார். எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.