தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் தலைமை வகித்து, மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்த 3 பேர், புதிதாக மனு கொடுக்க வந்த 36 பேர் என மொத்தம் 39 பேர் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். மேலும், அந்த மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.