கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் திருச்சியில் பணியாற்றிய எஸ்பி சுஜித்குமார் பணியிடம் மாற்றப்பட்டதை தொடர்ந்து வருண்குமார் இ.கா.பா., திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார்.
சுஜித்குமார் சட்ட ஒழுங்கு கட்டுப்பாடு என்று திருச்சி மாநகரை தனது கட்டுக்கோப்பில் வைத்திருந்தார். யாரும் எதிர்பாராத நேரத்தில் ரோந்து சென்று சமூக விரோதிகளை திக்குமுக்காட செய்வார். தற்போது அவரைத் தொடர்ந்து கண்காணிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் வருண்குமார் அவர்களும் பதவி ஏற்ற நாளிலிருந்து பல அதிரடியான சம்பவங்களை செய்து வருகிறார். பொறுப்பேற்ற உடனே பொதுமக்கள் புகார் செய்வதற்காக தனியாக பிரத்தியேகமான செல்போன் நம்பர் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த நம்பருக்கு வரும் அனைத்து புகார்களையும் கவனித்து உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இவ்வாறு பொறுப்பேற்ற நாள் முதல் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வருண்குமார் இந்திய காவல் துறையில் அதிரடிக்கு பெயர் பெற்ற வந்திதா பாண்டே அவர்களின் கணவர் ஆவார். உத்திரபிரதேசம் மாநிலம் அலகாபாத்தை பூர்வீகமாக கொண்ட வந்திதா பாண்டே கடத்த பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று சட்டத்தை நிலை நாட்டும் நேர்மையான ஒரு அதிகாரி ஆவார். இப்படி ஜோடியாக கணவனும் மனைவியும் சேர்ந்து சட்ட விரோதிகளை ஒழிக்க அயராது பணியாற்றும் இவர்களின் அதிரடி தொடர பொதுமக்களோடு சேர்ந்து நாமும் விரும்புகிறோம்.