தாம்பரம், மேற்கு தாம்பரம், பீமேஷ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினகுமார், 30, மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் ஸ்ரீராம், 30, இருவரும் 2022 ஜூன் 30ல், தாம்பரம் போலீசில் புகார் ஒன்றை அளித்தனர்.
அதில், ‘மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த சத்தியேந்திர நாயர், 50, என்பவர், ‘இந்தியன் ஆயில் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில்’ வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி, 2020 நவம்பரில் மொத்தமாக 29.80 லட்சம் ரூபாய் கொடுத்தோர். ‘ஆனால் வேலையும் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இந்த நிலையில், 2021 டிசம்பரில், வீட்டை காலி செய்து மாயமானார். எனவே, தங்களின் பணத்தை மீட்டு தரவேண்டும்’ என கூறியிருந்தார்.
இதையடுத்து, தாம்பரம் காவல் உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில், தாம்பரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் சகிலா மற்றும் தனிப்படையினர் சத்தியேந்திர நாயரை தேடிவந்தனர்.
இந்த நிலையில், சத்தியேந்திர நாயரை கைது செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.