சீர்காழியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகை கடன் மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள் மூவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நகை கடன் பெற வரும் வாடிக்கையாளர்களிடம் நகைகளை பெற்றுக் கொண்டு அவர்கள் கேட்கும் பணத்தை கொடுக்கும் நிதி நிறுவன ஊழியர்கள் அதற்கான ரசீதுகளை கொடுக்கவில்லை.
இது குறித்து வாடிக்கையாளர்கள் கேட்கும் போது கம்ப்யூட்டர் பழுது, கரண்ட் இல்லை என்பது போன்ற காரணங்களை சொல்லி தட்டிக் கழித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.