W35 தாம்பரம் மகளிர் காவல் நிலைய குற்ற எண் 53/2022 வழக்கில் பாதிக்கப்பட்ட சுமார் 33 வயது பெண்ணை குரோம்பேட்டையை சேர்ந்த சுமார் 34 வயதுள்ள ஆமீர்சையது என்பவர் கடந்த 2010ம் வருடத்திலிருந்து 12 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி பிறகு அந்தப் பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் வீட்டுக்கு சென்று கேட்ட போது அவரை ஆமீர்சையதும் அவரது பெற்றோர்களும் சேர்ந்து அடித்து அசிங்கமாக திட்டி ‘கொலை செய்து விடுவேன்’ என மிரட்டல் விடுத்ததின் பேரில் வழக்கின் எதிரி ஆமீர்சையத்தை 09/09/2023ந் தேதியன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.