தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா உபயோகிப்பவர்களை கண்காணிக்கும் பொருட்டு தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் இ.கா.ப அவர்களின் உத்தரவின் படி காவல் இணை ஆணையர் மூர்த்தி அவர்களின் ஆணைக்கினங்க தாம்பரம் மாவட்ட காவல் துணை ஆணையர் A.பவன்குமார் ரெட்டி இ.கா.ப அவர்கள் மேற்பார்வையில் தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் அவர்கள் தலைமையில் தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ் மற்றும் தனிப்படையினர் கண்காணித்து வந்த நிலையில் 01.10.2023 ம் தேதியன்று நம்ப தகுந்த தகவலின் அடிப்படையில் தாம்பரம் கல்யாண் நகர் பகுதியில் வெங்கடேஷ் மற்றும் மாதவன் என்பவர்கள் மனித உயிருக்கும் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் கஞ்சா என்னும் போதை பொருளை தாம்பரம் பகுதியில் விற்பனை செய்து வருகிறார்கள் என்ற தகவலை கொண்டு மேற்படி நபர்களை 01.10.2023 அன்று அவர்களை அவர்களின் வீட்டின் அருகில் வைத்து கைது செய்து தாம்பரம் காவல் நிலைய குற்ற எண் 806/2023 ச/பி 8 (c) r/w 20(b) (ii) (B) NDPS Act வழக்கு பதிவு செய்யப்பட்டது, பின்பு அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் எடைபோடும் மிஷின் மற்றும் பேக் செய்ய பயன்படுத்தும் பிளாஸ்டிக்பை மற்றும் கஞ்சா விற்று அதில் சம்பாரித்த பணம் ரூபாய் 10.00.000/- ஆகியவற்றை கைபற்றப்பட்டது,
இவ்வழக்கின் எதிரிகள் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஐ.டி கம்பனியில் பணிபுரிபவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார் என தெரியவருகிறது, மேலும் வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.