எண்ணங்களின் தீவிர அகிம்சை
நேர்மறைச்சிந்தனை!!
சொற்களின் தீவிர அகிம்சை
இன்சொல்!!
செயல்களின் தீவிர அகிம்சை
ஒழுங்கு!!
வெற்றிகளின் தீவிர அகிம்சை
பணிவு!!
தோல்விகளின் தீவிர அகிம்சை
அனுபவம்!!
முயற்சிகளின் தீவிர அகிம்சை
நம்பிக்கை!!
உழைப்புகளின் தீவிர அகிம்சை
நேர்மை!!
இன்பங்களின் தீவிர அகிம்சை
அமைதி!!
துன்பங்களின் தீவிர அகிம்சை
துணிவு!!
மதங்களின் தீவிர அகிம்சை
சகிப்புத்தன்மை!!
மனங்களின் தீவிர அகிம்சை
அன்பு !!
இனி அன்பே
தீவிரமென்றாகட்டும்!!
இனி இப்புவிதனில் ஆயுதங்கள் இல்லையென்றாகட்டும்!!
– மீனாட்சி வெங்கடேஷ்