தமிழகத்தில் புகையிலைப் பொருட்கள் விற்பனையை முழுவதுமாக தடைசெய்வதற்காக, உணவு பாதுகாப்பு துறையுடன், காவல் துறை இணைந்து, அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக திடீர் ஆய்வுகள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திருமதி.சி.மகேஸ்வரி IPS அவர்கள் தலைமையில் காவல் துணை ஆணையாளர்கள் திரு.K.சரவணகுமார் அவர்கள் (மேற்கு) திருமதி.G.S. அனிதா அவர்கள் (தலைமையிடம்) மற்றும் சரக காவல் உதவி ஆணையாளர்கள் திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
நெல்லை மாநகரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான் மசாலா மற்றும் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய போதை பொருள்களின் விற்பனையை எவ்வாறு கண்டறிவது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வது போன்றவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.