உன் அன்னை கேட்டேன்
மேகம் என்றாய்..
உன் தந்தை கேட்டேன்
குளிர்காற்று என்றாய்..
உன் சொந்தம் கேட்டேன்
இடியும் மின்னலும் என்றாய்..
உன் வீடு கேட்டேன்
ஆகாயம் என்றாய்..
உன் நண்பன் கேட்டேன்
மரமும் கடலும் என்றாய்..
உன் ஆரம்பம் கேட்டேன்
ஆகாயம் என்றாய்..
உன் முடிவு கேட்டேன்
பூமி என்றாய்..
உன் தனித்தன்மை கேட்டேன்
பாரபட்சமின்மை என்றாய்..
உன் விருப்பம் கேட்டேன்
செழுமை என்றாய்..
உன் பதவி கேட்டேன்
உயிர்காவலன் என்றாய்..
உன் ஆசை கேட்டேன்
பயன்படுதல் என்றாய்..
உன் கோரிக்கை கேட்டேன்
சேமியுங்கள் என்றாய்..
உன் நாமம் கேட்டேன்
வான்மழை என்றாய்!!
– மீனாட்சி வெங்கடேஷ்