கனத்த இதயத்துடன் காக்கிக்குள் கலந்து
காலம்பூரா காவலுக்கே வாழ்க்கையை கடந்து
கொண்டவள் அழைத்தாலும் கொஞ்சநாள் பொறுத்து
கொடுத்த பணிகளுக்குள் தன்னை இணைத்து
புயலோ வெள்ளமோ
முன்னின்று காத்து
பெத்தபிள்ளைகளோ அப்பாவின் வரவுக்காக காத்து
நெஞ்சுக்குள் பாசங்கள் நித்தமும் முளைத்து
நிறைவேறாத எண்ணங்களாய் மனதுக்குள் மறைத்து
காவலும் கடமையும் குடும்பத்தோடு சேர்த்து
காட்டுகின்ற பணிகளை ஆவலோடு முடித்து
இயற்கை பேரிடர்களை
எதிர்கொண்டு பாதுகாத்து
இளகிய இதயங்களாய்
எல்லோரையும் பாதுகாத்து
சிக்கிய பெற்றோர்களை சீக்கிரமாய் வெளியேற்றி
சிரித்திடும் மழலையை
நெஞ்சோடு களைப்பாற்றி
தலையில் தொப்பியுடன் தலைமுறையை காக்கும்
தன்னுயிர் இருக்கும்வரை பிறருக்காக உழைக்கும்
– சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்