ஒரு வாரம் விடுமுறை என்றதும் தனது குடும்பத்தினருடன் செலவழிக்க என்னி இருந்த முத்துவிற்கு ஏதோ ஒரு எண்ணம் அவரை தினசரி வேலைகளை செய்ய விடாமல் குடைந்து கொண்டே இருந்தது. எங்கோ, எதையோ தவறவிடுகிறோம் என்று அவருக்கு தோன்றிக் கொண்டிருந்தது. படுக்கையில் மல்லாந்தவாரே சில மணி நேரங்கள் மீண்டும் மீண்டும் நடந்துவற்றையெல்லாம் யோசித்துக் கொண்டே இருந்தார் முத்து.
முத்துவை போல ஜானுக்கு வழக்கு பற்றி யோசிக்க எதுவும் இல்லாவிட்டாலும் தனது குடும்பத்தை பற்றி மீண்டும் மீண்டும் யோசிக்க தொடங்கினார். தனது மகள் தனக்காக ஒரு கடிதத்தையும் ஒரு பையையும் எதற்காக தேவாலயத்தில் விட்டுச் செல்ல வேண்டும் இதன் ரகசியம் என்ன என்று ஒன்றும் புலப்படாமல் முத்துவைப் போலவே ஜானுக்கும் நிம்மதி சிந்தனை தடைபட்டிருந்தது. மீண்டும் தேவாலயத்திற்கு சென்று அந்த பாதிரியாரை பார்க்க வேண்டும் என்று எண்ணினார் ஜான். அது போலவே முத்துவும் மீண்டும் காதரை தொடர்பு கொண்டு இந்த வழக்கு தொடர்பான சம்பவங்களை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து கேட்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் காதருடன் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரியாததால் நேரடியாக சென்று கமிஷனரை பார்த்து விடலாம் என்று சிந்தித்தார் முத்து.
மறுமுனையில் ஜானுக்கு அந்த கவலை இல்லை என்பதால் நேரடியாக கிளம்பி தேவாலயத்திற்கு செல்ல முடிவெடுத்தார். ஜானுக்கு பல எண்ணங்கள் மற்றும் தன் மகளுடன் இருந்த நினைவுகள் வந்து வந்து சென்றன. தன் மகள் இறக்கும் தருவாயிலும் எங்கும் செல்லாமல் மகளின் அருகே அமர்ந்திருந்த ஜானுக்கு ஒருவேளை தன்மகள் ஏதாவது கூற வேண்டும் என்றால் தன்னிடம் நேரடியாகவே கூறியிருக்கலாமே நாம் அங்கேயே தானே அமர்ந்திருந்தோம் அப்படி இருக்க கடிதம் ஒன்றை எழுதி கைப்பையுடன் இணைத்து தேவாலயத்தில் வைத்து செல்ல அவசியம் என்ன. அதுவும் தான் இறந்து விடுவோம் என்று அவளுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது அப்படி இருக்க அதை ஏன் நம்மிடம் கூறவில்லை ஏதேனும் ஆபத்து இருந்திருந்தால் நம்மிடம் அதை எச்சரிக்கை செய்திருக்கலாம் ஆனால் அவள் அப்படி செய்யவில்லை அதற்கான காரணம் என்ன என்று பல யோசனைகள் ஜானை வாட்டி வதைத்து கொண்டிருந்தது.
இந்த கேள்விகள் அனைத்திற்கும் விடை தெரிய வேண்டும் என்றால் தேவாலயத்துக்கு செல்வது தான் வழி என்று முடிவெடுத்த ஜான் உடனடியாக தேவாலயத்திற்கு கிளம்ப ஆரம்பித்தார். தன் மனைவியிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு கிளம்பிய ஜான் அடுத்த அரை மணி நேரத்திற்குள் தேவாலயத்தை அடைந்திருந்தார். கிறிஸ்டினாவுடன் கடைசியாக தேவாரத்திற்கு வந்திருந்த போது நடந்த அனைத்து சம்பவங்களும் ஜானுக்கு கண் முன் படம் ஓடுவது போல் ஒரு நிமிடம் வந்து ஓடியது. மீண்டும் பல சந்தேகங்கள் ஜானுக்குள் எழுந்தது “நாம் தான் ஜான் என்பது பாதிரியாருக்கு எப்படி தெரியும்?” நமது மகளுக்கும் பாதிரியாருக்கும் உண்டான நட்பு எப்போது ஏற்பட்டது. நம் மகளுக்கு ஆபத்து ஏற்பட போகிறது என்று ஒருவேளை இந்த பாதிரியார்க்கும் முன்கூட்டியே தெரிந்திருக்குமா? அப்படி தெரிந்திருந்தால் நாம் தான் ஜான் என்று தெரிந்த பாதிரியார் நம்மிடம் அதை ஏன் கூறவில்லை? என்று பல கேள்விகள் ஜானின் தலைக்குள் தோன்றி அவரை ஒரு வழி ஆக்கிவிட்டது.
கேள்விகள் தனக்குள்ளே இருந்தால் அதற்கு விடை கிடைக்காது என்று ஜானுக்கு நன்றாக தெரியும் ஆகவே கேள்விகளுக்கு விடை தெரிய கேள்விகளை வெளியே கொண்டு வர வேண்டும் என்று யோசித்த ஜான் நேரடியாக பாதிரியார் இருக்கும் அறைக்கு சென்றார். ஆனால் அரை பூட்டப்பட்டிருந்தது. பாதிரியாரை எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என்று தேவாலயத்திற்கு வெளியே வந்து அங்கு வேலை செய்யும் நபர்களிடம் பாதிரியாரை பற்றி விசாரிக்க தொடங்கினார். ஆனால் பாதிரியார் எங்கு என்று யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை.
என்னவாணாலும் சரி கண்டிப்பாக பாதிரியாரை பார்க்காமல் இங்கிருந்து செல்லக்கூடாது என்று முடிவெடுத்த ஜான் தேவாலயத்தின் உள்ளே சென்று பாதிரியார் வரும் வரை காத்திருக்கலாம் என்று முன் வரிசையில் அமர்ந்தார். எவ்வளவு முயற்சி செய்தாலும் தனக்குள்ளே ஓடும் என்ன ஓட்டங்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார் ஜான். ஒரு நிலையில் அனைத்து கேள்விகளும் சேர்ந்து “நாம் குடும்பத்தின் மீது சரியான நேரத்தையும், கவனத்தையும் வைக்கவில்லை என்று ஜானுக்கு குற்ற உணர்ச்சியாகவே மாறியது. வேலை வேலை என்று அலைந்து திரிந்த நமக்கு தற்போது என்ன மிச்சம் என்று யோசித்த ஜான் அதுவரை தன் வாழ்நாளில் ஏற்படாத ஒரு நிகழ்வாக அவர் உயிருக்கும் மேலாக மதிக்கும் காக்கி சட்டையின் மீது வெறுப்பு வந்தது.
தனது என்ன ஓட்டங்களுடன் போராடிக் கொண்டிருந்த ஜானுக்கு தன் அமர்ந்திருந்த ஒரு மணி நேரம் எப்படி கடந்தது என்று தெரியவில்லை ஒரு வழியாக பாதிரியாரும் தேவாலயத்திற்குள் நுழைந்தார். ஜான் முதல் வரிசையில் அமர்ந்து இருந்ததை பார்த்த பாதிரியார் “இதை நான் முன்னாடியே எதிர்பார்த்து இருந்தேன் மிஸ்டர் ஜான்” என்று சத்தமிட்டதும் ஜான் என்ன ஓட்டங்களில் இருந்து விடுபட்டு நிகழ்வுக்கு திரும்பினார். சத்தம் கேட்ட திசையில் திரும்பிய ஜானுக்கு ஒரு வழியாக பாதிரியாரை பார்த்து விட்டோம் என்று நிம்மதி பெருமூச்சு வந்தது. ஜானின் அருகே வந்த பாதிரியார் “பரவாயில்லை தற்போது உங்களுக்கு தோன்றியது சந்தோஷம். அன்று நடந்த சம்பவத்திற்கு மறுநாள் நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்” என்று கூறிவிட்டு தான் அணிந்திருந்த அங்கியின் பைக்குள் கைவிட்ட பாதிரியார் சாவிக்கொத்தை எடுத்து ஜானின் முன்னே நீட்டினார். உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்க நான் தயார் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்று அவர் கூரியதும் பாதிரியாரை ஆச்சரியத்துடனும், குழப்பத்துடனும் பார்த்தார் ஜான். “வாங்கிக் கொள்ளுங்கள் ஜான் நீங்கள் இதற்கு உரிமை பட்டவர் நான் இதற்கு கடமைப்பட்டவன் என்னோடு வாருங்கள்” என்று கூறிவிட்டு ஜானிடம் சாவியை கொடுத்துவிட்டு பிரார்த்தனை கூட மேடையின் பின்பக்கத்தில் அமைந்திருந்த படிக்கட்டில் ஏறத் தொடங்கினார் பாதிரியார்.
சாவிக்கொத்தை வாங்கிக் கொண்டு அவரை பின்தொடர்ந்த ஜான் அவர் கூறியதைக் கேட்டு மிகவும் மன வேதனை பட்டார். ஜானுடைய குற்ற உணர்ச்சி மேலும் பட படிகள் உயர்ந்து விழுங்கும் அளவிற்கு அவரை சிறியதாக அவர் கண்முன்னே காட்டியது. இதன் காரணமாக அவருக்கு காக்கி சட்டையின் மீது ஏற்பட்ட ஒரு நொடி வெறுப்பு தற்போது பெரிய அளவில் உயர்ந்து நம் வாழ்நாளில் பெரிய தவறை செய்து விட்டோம் என்று காக்கி சட்டையின் மீது ஒரு வகையான கோபம் கொள்ளும் அளவிற்கு ஆனது.படிக்கட்டில் ஏறிக்கொன்டிருந்த ஜான் தனது கையில் இருக்கும் சாவிக்கொத்தை பார்த்த போது அதில் தனது மகள் படம் இருந்தது படம் இருந்ததைக் கண்டு தன்னை அறியாமல் கண்களில் இருந்து நீர் பெருக்கெடுத்து முகத்தில் வழிந்தது..
(தொடரும்…)