சரவணம்பட்டி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் சி.ஆர்.ஐ.பம்ப்ஸ் நிறுவனத்தின் 50 % பங்களிப்பில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின்கீழ் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் 5 கூடுதல் வகுப்பறைகள் கட்டடம் அண்மையில் கட்டிமுடிக்கப்பட்டது.
இதை கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் மாணவர்கள் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்தார். சி.ஆர்.ஐ.பம்ப்ஸ் இயக்குநர் திருமதி.சாகித்யா இதில் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், கல்வி குழு தலைவர் மாலதி நாகராஜ், மாமன்ற உறுப்பினர் கதிர்வேலுசாமி, பள்ளி தலைமையாசிரியர் கலாமணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.