திருச்சி மாவட்ட காவல்துறையில் திருவெறும்பூர் காவல் சரகத்திற்க்கு உட்பட்ட பள்ளிகளில் மாணவ மாணவிகளின் அறிவாற்றல் மேம்படுதல், விளையாட்டு வீரர்கள்&வீராங்கனைகள் வெற்றி பெற ஊக்கப்படுத்தும் விதத்தில் ஆக்கபூர்வமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தி மற்றும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை தமது காவல் சரக காவல் குழுவினருடன் நடத்தி பொதுமக்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுடன் வாழ பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தியும், திருவெறும்பூர் காவல் சரகத்தில் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போன்ற காவல் பணிகளில் தமது காவல் சரக காவல்துறையினரை ஊக்கப்படுத்தி தீவிரமாக பணியாற்ற வைத்து சிறப்பாக காவல் பணியாற்றியதற்கு 2023 ஆம் ஆண்டின் சிறப்பு காவல் பணிக்கான பாராட்டு சான்றிதழை மத்திய மண்டல IG. G.கார்த்திகேயன் IPS திருவெறும்பூர் சரக காவல் துணை கண்காணிப்பாளர் DSP. அறிவழகன் அவர்களுக்கு வழங்கி பாராட்டினார்.