தென்காசி மாவட்டம் மேலபாட்டா குறிச்சியில் முப்புடாதி அம்மன் கோவில் அருகில் இருந்த ரேஷன் கடை மேற்கூரை பழுதாகிப் போகவே அதனை மொத்தமாக அப்புறப்படுத்திவிட்டு புதிய ரேஷன் கடை கட்டுவதாக கூறிய மாவட்ட நிர்வாகம் ஆறு மாதங்களுக்கும் மேலாக ரேஷன் கடையை கட்டித் தரவில்லை என்று காத்திருக்கிறார்கள் பொதுமக்கள்….
மேலும் ஊருக்கு ஒதுக்கு புறமான தெருவோரத்தில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தற்காலிகமாக அதில் ரேஷன் கடை செயல்பட்டு வருவதாகவும் அங்கு கூட கைரேகை வைக்கும் மெஷினுக்கு தேவையான வேகத்தில் இன்டர்நெட் வசதி கிடைக்கவில்லை என்றும் பல நேரமும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் நிலையும் உள்ளது. இதனால் கைரேகை வைக்கும் மிஷினை தூக்கிக்கொண்டு கடை ஊழியரான சங்கர் என்பவர். அங்குள்ள நூலகத்தின் முன்னால் இருந்து கொண்டு (அப்பத்தான் டவர் கிடைக்கும்) சமீபகாலமாக கைரேகை பதிவு செய்வதும் டோக்கன் வழங்குவதுமாக பயன்படுத்தி வருவதாகவும் இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் அவர்கள் நினைத்த நேரத்திற்கு கடையை திறப்பதும் ஒன்றுக்கு பாதியாக பொருட்களை வழங்குவதும், பின்னர் திடீரென பூட்டிவிட்டு சென்று விடுவதும் வழக்கமாய் கொண்டிருக்கிருப் பதாக குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள்.
தற்போது இந்த கடையில் கோதுமை அறவே கிடையாது என்றும் பச்சரிசி சுத்தமாய் கிடையாது என்றும் 600 காடுகளுக்கு வெறும் 30 லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வட்டார நிர்வாகம் தருவதாக கடை ஊழியர் குறை கூறிக்கொண்டு அதிலும் 10 லிட்டர் மொத்தமாக பிளாக்கில் விற்பனை செய்வதும் மேலும் நல்ல அரிசியை மூட்டை ஆயிரம் ரூபாய்க்கு வெளிமார்க்கெட்டில் விற்றுவிட்டு மோசமான நிலையில் உள்ள புழுத்த அரிசியை மக்கள் தலையில் வேண்டும் என்றே கட்டுகின்ற ஏற்பாடு இருந்து வருகிறதும் அங்குள்ள பலருக்கு 20 கிலோ அரிசி எடை போட்டால் 15 கிலோ மட்டுமே பையில் விழுவதாகவும் 18 கிலோ அரிசிக்கு 14 கிலோ மட்டுமே இருப்பதாகவும் கேட்டால் எடை போடும் சட்டியின் அளவு கழிக்கப்படும் என்று கூறுவதாக குற்றம் சாட்டுகிறார்கள் மக்கள். சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் மிக மிகக் குறைவாக வருவதாகவும் அதனால் பலருக்கு சமையல் எண்ணெய் கிடைப்பதில்லை என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
இதனையும் மீறி நல்ல அரிசியை தாருங்கள் என்று கேட்பவர்களிடம் சாதுரியமாக பழைய அரிசியை விற்றால்தான் புதிய அரிசியை வழங்க முடியும் என்று கண்டிப்பாய் கூறி மறுத்து விடுகிறாராம் எடையாளர் துரை. மத்திய அரசு வழங்கும் 35 கிலோ அரிசிக்கு 20 கிலோ அரிசி மட்டுமே தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் மீதியுள்ள அரசி மூட்டை மூட்டையாக பொதுமக்கள் கண்முன்னே பலமுறை மொத்தமாக கடத்தப் படுவதாகவும் மக்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார்கள். இதெல்லாம் நடப்பதற்கு ஏதுவாக ரேஷன் கடை ஊரின் மத்தியில் இருந்து மக்களின் பார்வையில் இருந்து ஏதோ ஒரு தெரு மூலையில் இருப்பதால்தான் கடை ஊழியர்கள் தைரியமாக பட்டப் பகல் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள் என விபரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்..
கடத்தப்படும் பொருட்கள் தடுக்கப்படுமா… அதே இடத்தில் எப்போது கட்டப்படும் ரேஷன் கடை… காத்திருக்கும் பாமரர்கள்….